யாழில் வேறொருவருக்கு வாகனம் செலுத்தக் கொடுத்த உரிமையாளருக்கு நேர்ந்த நிலை

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதவருக்கு வாகனத்தை செலுத்த கொடுத்த நபருக்கு 4 ஆயிரம் ரூபாய் சாவகச்சேரி நீதிவான் தண்டம் விதித்துள்ளார்.

சாவக்கசேரி பொலிஸாரினால், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதவருக்கு வாகனத்தை செலுத்த வாகனத்தை வழங்கினார் என குற்றம் சாட்டி வாகன உரிமையாளருக்கு எதிராக நேற்று முன்தினம் வழக்கு தாக்கல் செய்தனர்.

குறித்த வழக்கு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, தன் மீதான குற்றசாட்டை வாகன உரிமையாளர் ஏற்றுக்கொண்டதை அடுத்து 4 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த நீதிவான், கடுமையாக எச்சரித்து அவரை விடுவித்தார்.

Latest Offers