க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் உண்மையான பரீட்சார்த்திக்குப் பதிலாக மற்றமொருவர் பரீட்சைக்குத் தோற்றிய சம்பவம் முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றியவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
தமிழ்மொழியும் இலக்கியம் என்ற பாடத்திற்கே உண்மையான பரீட்சார்த்திக்குப் பதிலாக வேறொருவர் தோற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் 10 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கிறது. இருப்பினும், சில முறைப்பாடுகள் தவறானவை என்று ஆய்வுகள் மூலம் வெளிவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த முறைப்பாடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.