புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூக மயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு உதவித்திட்டங்கள்

Report Print Sumi in சமூகம்

புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூக மயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகள் ஒரு தொகுதியினருக்கு வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

யாழ்.அரியாலை சர்வோதய நிலையத்தில் புனர்வாழ்வு அதிகாரசபையின் யாழ் மாவட்ட இணைப்பாளர் கேணல் வஜிர மடுகல்ல தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

புனர்வாழ்வு அதிகாரசபையினால் கடந்த காலங்களில் புனர்வாழ்வு பெற்று சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு 16 குடும்பங்களிற்கு பசு மாடுகள் மற்றும் 42 குடும்பங்களுக்கு ஆடுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கன் வேதநாயகன், புனர்வாழ்வு அதிகாரசபையின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் ஹேமன் பெர்னாண்டோ, யாழ் மேலதிக அரச அதிபர் சுதர்சன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு இந்த உதவித்திட்டங்களை வழங்கி வைத்துள்ளனர்.

Latest Offers