நாட்டின் நெருக்கடிக்கு மத்தியில் கூகுளில் இலங்கையர்கள் அதிகமாக தேடிய சொல்

Report Print Steephen Steephen in சமூகம்

கூகுள் தேடு தளத்தில் அதிகமான தடவைகள் செக்ஸ் என்ற சொல்லை தேடிய நாடுகள் வரிசையில் தொடர்ந்தும் முதல் இடத்தில் இருந்து வந்த இலங்கை கடந்த 12 மாதங்களில் மூன்றாம் இடத்திற்கு வந்துள்ளது.

கூகுள் ட்ரென்டிஸ் ஊடாக ஆராய்ந்ததில் இருந்து தெரியவந்துள்ளது. கடந்த 12 மாதங்களில் செக்ஸ் என்ற சொல்லை அதிகம் தேடிய நாடாக பங்களாதேஷ் முதல் இடத்தில் இருப்பதுடன் எத்தியோப்பியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

மூன்றாவது இடத்தில் இலங்கையும் நான்காவது இடத்தில் நேபாளமும் ஐந்தாவது இடத்தில் இந்தியாவும் இருக்கின்றன.

இலங்கையில் செக்ஸ் என்ற சொல்லை அதிகமாக தேடிய மாகாணம் வடமத்திய மாகாணம் என்பதுடன் அந்த மாகாணத்தின் பிஹிம்பியாகொல்லாவ பிரதேசத்தில் இந்த சொல்லை அதிகமாக தேடியுள்ளனர். இதற்கு முன்னர் ஹோமாகம பிரதேசம் முதல் இடத்தில் இருந்தது.

இலங்கையின் பாடசாலை விடுமுறை காலமான ஏப்ரல், ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் செக்ஸ் என்ற சொல்லை அதிகமாக தேடப்படுவதாக தெரியவந்துள்ளது.

Latest Offers