தொழிலாளர்கள் சார்பில் கோரப்படும் 100 வீத சம்பள உயர்வை தம்மால் வழங்கமுடியாது!

Report Print Ajith Ajith in சமூகம்

பெருந்தோட்ட தொழிலாளர்கள் சார்பில் கோரப்படும் 100 வீத சம்பள உயர்வை தம்மால் வழங்கமுடியாது என்று பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தமது நிறுவனங்களை பொறுத்தவரை தமக்கு கிடைக்கும் வருமானத்துக்கு ஏற்றாற்போல தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளங்களை வழங்கிவருகிறது. எனினும் இந்த நிலையை மிஞ்சிய வகையில் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் கோரும் சம்பளங்களை வழங்கமுடியாது.

இந்தக் கோரிக்கை பெருந்தோட்டத்துறையை பாரியளவில் பாதிக்கும். ஏற்கனவே தமது நிறுவனங்கள் உற்பத்தித்துறையுடன் தொடர்புபடுத்தி 1000 ரூபாவை இலகுவாக பெறக்கூடிய வகையில் திட்டங்களை அறிவித்துள்ளது.

அத்துடன் இந்த தடவை 20வீத சம்பள உயர்வின் அடிப்படையில் 500 ரூபா அடிப்படைச் சம்பளம் 600 ரூபாவாக உயர்த்தப்பட தமது நிறுவனங்கள் இணங்கியுள்ளன.

இதன்கீழ் ஏனைய கொடுப்பனவுகளையும் சேர்த்து தொழிலாளி ஒருவர் 940 ரூபாவை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் பெருந்தோட்ட நிறுவன முதலாளிமார் சம்மேளனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

Latest Offers