கிளிநொச்சியில் நானூறு பேருக்கு மூக்கு கண்ணாடி வழங்கி வைப்பு

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சியில் இனங்காணப்பட்ட நானூறு பேருக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மூக்கு கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு இன்று காலை ஒன்பது மணிக்கு கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

கொழும்பு றோட்டரிக் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பாரதிபுலம், சாந்தபுரம், மலையாளபுரம், கிருஸ்ணபுரம், திருவையாறு, அம்பாள்நகர் போன்ற கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மூக்கு கண்ணாடிகளை பெற்றுள்ளனர்.

இந்த நிகழ்வானது பாடசாலை அதிபர் பெ.கணேசன் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன்குயின்ரன்ஸ், கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் கே.பி. மகிந்த குணரட்ன, அருட்தந்தை வண. டானியல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Latest Offers