வவுனியாவில் வீதிக்கு வந்த முதலையால் பதற்றம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா - நெளுக்குளம் பகுதியில் வீதிக்கு வந்த முதலையால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் இன்று காலை 12 அடி நீளமான முதலை ஒன்றை அவதானித்துள்ளதாகவும், முதலையை விரட்டுவதற்காக மக்கள் அவ்விடத்தில் கூடிய போது வீதியோரத்தில் இருந்த சிறிய பற்றைக்குள் புகுந்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை வந்த பொலிஸார், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் உதவியோடு முதலையை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers