கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர் மட்டம் அதிகரிப்பு

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - இரணைமடு குளத்தின் நீர் மட்டம் அண்மைக் காலமாக பெய்துவரும் கன மழை காரணமாக இன்று பகல் 35 அடி 8.5 அங்குலமாக உயர்வடைந்துள்ளது.

ஏற்கனவே 34 அடி நீர் கொள்ளளவைக் கொண்ட குறித்த குளத்தின் நீர்மட்டம் இன்று மேலும் இரண்டு அடி அதிகரிக்கப்பட்டு 36 அடிவரை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கின் பாரிய குளமான இரணைமடுக்குளம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் 2000 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers