வடக்கின் முக்கிய பகுதியொன்றில் மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள்

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் அனர்த்தத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான ஒத்திகை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.ஐ.கனீபாவின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்றது.

வவுனியா - பாவற்குளம் கிராமத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து அனர்த்தம் ஏற்பட்டால் மக்களை எவ்வாறு பாதுகாப்பாக கிராமத்திலிருந்து வெளியேற்றுவது, அவர்களுக்கான பாதுகாப்பை எவ்வாறு வழங்குவது என அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால், இன்று காலை 8.30 மணி தொடக்கம் 11.30 மணி வரை ஒத்திகை ஒன்று இடம்பெற்றது.

குறித்த குளம் நீர் நிரம்பிக்கொண்டிருக்கும் நிலையில் திடீரென உடைப்பெடுத்தால் குளத்தின் நீர் செல்லும் பகுதிகளை அண்டியுள்ள கிராமங்களான, பாவற்குளம் படிவம் 01, 04, 05, 06, சூடுவெந்தபுலவு, ஆண்டியாபுளியங்குளம், கந்தசாமிநகர் போன்ற கிராமங்களிலிருந்து மக்களை எவ்வாறு பாதுகாப்பாக வெளியேற்றி முகாம்களில் தங்கவைத்து பராமரிப்பது என்பது தொடர்பாக அங்கு கலந்துரையாடப்பட்டது.

குறித்த ஒத்திகையின் போது ஏழு கிராமங்களை சேர்ந்த ஒரு தொகுதி மக்கள் பொது மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு, பராமரிப்பு மற்றும் முதலுதவி, மருத்துவ ஒத்திகைகள் செய்யப்பட்டதுடன், கிராமங்களிலிருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.

இவ் ஒத்திகை நிகழ்வில் கிராம உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை மருத்துவ உத்தியோகத்தர்கள், தாதியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers