அடுத்த கட்ட பேச்சுவார்த்தையே இறுதி பேச்சுவார்த்தையாக அமைய வேண்டும்!

Report Print Kumar in சமூகம்

நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக திகழும் பெருந்தோட்டதுறை தொழிலாளர்களுக்கு ஏன் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க முடியாது என கேள்வி எழுப்பியுள்ள கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்ட தொழிலாளர்கள், முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டுள்ளனர்.

சுமார் 100 இற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து ஸ்டோனிகிளிப் தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக இன்று குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதால் எங்களுக்கு பயனில்லை என தெரிவித்த தொழிலாளர்கள், நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுக்காவிட்டால் தேயிலை தொழிற்சாலையிலிருந்து விற்பனைக்காக அனுப்பப்படுகின்ற தேயிலை தூளை தடுக்கப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி சுகபோக வாழ்க்கையை நடத்தும் கம்பனிகாரர்கள் இன்றைய வாழ்வாதாரத்தினை நினைவில் வைத்துக் கொண்டு அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை இறுதி பேச்சுவார்த்தையாக முன்னெடுத்து ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்க வேண்டும் என அழுத்தமான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

Latest Offers