கல்கிஸ்ஸ துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞர் யார்? வெளியான தகவல்

Report Print Murali Murali in சமூகம்

கல்கிஸ்ஸ கல்தெமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற லஹிரு சந்தருவன் எனும் அங்குலான உதார என்று தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போதைப் பொருள் மற்றும் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவர் கொனா கோவிலே ரொஹான் என்ற பிரபல பாதாள உலக குழுத் தலைவனின் நெருங்கிய சகா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்குலான அஞ்சுலா என்ற பாதாள உலக குழுத் தலைவனின் சகாக்களே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Latest Offers