மத்திய அரசாங்கத்திற்கு அடுத்தபடியான அதிகாரம் மிக்க கட்டமைப்பு இதுவே

Report Print Gokulan Gokulan in சமூகம்

மக்களுடைய இறைமையை பாதுகாக்கக்கூடிய இலங்கையின் உச்சகட்ட அதிகாரமுடைய சட்டமான அரசமைப்பு தொடர்பான தெளிவை, அனைவரும் பெற்றிருத்தல் அவசியமென திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுப்படுத்தும் கலந்துரையாடலொன்று திருகோணமலை கச்சேரியில் இன்று நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

மேற்குலக நாடுகள் சிலவற்றில், மத்திய அரசாங்கத்துக்கு அடுத்தபடியான அதிகாரம் மிக்க கட்டமைப்புக்களாக விளங்குவது உள்ளூராட்சி மன்றங்களே.

அவ்வாறான உள்ளூராட்சி மன்றங்கள், பொதுமக்களுக்கு தேவையான நல்ல பல தீர்மானங்களை எடுத்து, அவற்றை நடைமுறைப்படுத்தி வருகின்றன என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், வெளிநாடுகளில், ஊழல், துஷ்பிரயோகங்கள் காணப்படுவது அரிது. அவ்வாறு காணப்பட்டாலும் கூட அவற்றுக்கான தண்டனை சட்டங்கள் மிகக் கடுமையாக காணப்படுகின்றன எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.