இலங்கை கடவுச்சீட்டுக்களின் தரம் உயர்வு

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கை கடவுச்சீட்டுக்களின் சர்வதேச தரம் 9 புள்ளிகளால் அதிகரித்து 84வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை 16 நாடுகளுக்கு இலவச விசாக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

29 நாடுகளுக்கு வருகைத்தர விசா முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

154 நாடுகளுக்கு விண்ணப்ப விசாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் லெபனான் மற்றும் லிபியா ஆகிய நாடுகளுடன் சேர்த்து 84வது இடத்தை இலங்கை உயர்த்தப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தை பொறுத்த வரையில் அது உலகின் முன்னிலை கடவுச்சீட்டை கொண்ட நாடாக தரப்படுத்தப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டு குறிக்காட்டியின்படி ஐக்கிய அரபு ராச்சியத்தின் கடவுச்சீட்டுடன் 127 நாடுகளுக்கு வீசா இன்றி செல்லமுடியும்.

ஜேர்மன் கடவுச்சீட்டுக்களின் மூலம் 126 நாடுகளுக்கு முன்கூட்டிய வீசாக்கள் அவசியம் இல்லை.

டென்மார்க், சுவீடன், பின்லாந்து, லக்சம்பேர்க், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், நோர்வே, தென்கொரியா, அமரிக்கா ஆகிய நாடுகள் மூன்றாவது அதிகாரம் மிக்க கடவுச்சீட்டுக்களை கொண்டுள்ளன.

Latest Offers