நாடாளுமன்ற பொதுத்தேர்தலை நடத்த கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டம்

Report Print Ashik in சமூகம்

அபிவிருத்தியற்ற ஆட்சியை மாற்றி நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நடாத்தக்கோரி மன்னார் மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் பொது வைத்தியசாலை, பிரதான வீதியில் இன்று காலை 11 மணியளவில் இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் போது சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் பலர் பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீண்டும் பிரதமராக மஹிந்த ராஜபக்சவை நியமிக்க வேண்டும் எனவும், சுயாதீனமான நாடாளுமன்ற பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Latest Offers