நெற்பயிர்ச் செய்கையில் புதிய நோய் அபாயம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

நெற்பயிர்ச் செய்கையில் புதிய வகை "போல் ஆமிம்வேம்" என்ற நோய் தொற்றியுள்ளதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தில் பிரதான பயிர்ச் செய்கையாக நெற்பயிர்ச் செய்கை இரு போகங்களுக்கு பயிரிடப்பட்டு வருகின்றது

தற்போது நெற்பயிர்களுக்கிடையே "போலிங் அமீம்வேம்" என்ற நோய் இது ஒரு வகை புழு நெற்பயிர்களுக்கு சேதம் விளைவிக்கின்றது. விவசாயிகள் இதனை கட்டுப்படுத்துவதற்கு இரசாயன பதார்த்தங்கள் பயன்படுத்துவதால் அதிகளவு செலவு செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இவ்வகை நோயை கட்டுப்படுத்துவதற்கு "ஒராஜென் , வேட்டக்கோ" போன்ற இரசாயண பதார்த்தம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

போல் ஆமிம்வேம் என்ற நோய் 1 - 45 நாள் வரையான பயிர்களை அதிகளவு தாக்குவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Latest Offers