பொய் சாட்சி கூறிய பெண் பொலிஸ் அதிகாரிக்கு கிடைத்த தண்டனை

Report Print Steephen Steephen in சமூகம்

இலஞ்சம் பெற்ற வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு சார்பாக பொய் சாட்சி கூறிய மாவனெல்லை பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க, இன்று இரண்டு ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

குற்றவாளியின் மகன் சாதாரண தரப் பரீட்சையில் தோற்றுவதால், அவருக்கு குறைந்தபட்ச தண்டனையை வழங்குமாறு பெண் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.

எனினும் அரசின் பொறுப்பான பதவியில் இருக்கும் பொலிஸ் அதிகாரி, நீதிமன்றத்தில் பொய் சாட்சி கூறியதை குறைந்தபட்ச குற்றமாக கருத முடியாது என தண்டனை வழங்கிய தீர்ப்பளித்த நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

போக்குவரத்து சட்ட விதிகளை மீறிய நபருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடராமல், அபராதம் விதிப்பதற்காக 2 ஆயிரத்து 500 ரூபாய் இலஞ்சம் பெற்றதாக மாவனெல்லை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரிக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழு வழக்கு தொடர்ந்திருந்தது.

குற்றம் சுமத்தப்பட்ட பொறுப்பதிகாரி சார்பில் சாட்சியமளித்த பெண் பொலிஸ் சார்ஜன்ட், சம்பவம் நடந்த நேரத்தில் தானும் அங்கு இருந்ததாகவும் இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் குப்பை கூடையில் இருந்து பணத்தை எடுத்ததை தான் பார்த்ததாகவும் கூறியிருந்தார்.

விதிக்கப்பட்ட தண்டனை காலம் ஒரு வருடத்தில் கழியும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி, சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Latest Offers