சிறை கைதிகளுக்கான சாரணர் ஜம்போரி முன்னெடுப்பு

Report Print Mubarak in சமூகம்

சிறைக் கைதிகளுக்கான மூன்று நாள் சாரணர் ஜம்போரி, சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கண்டி - பல்லேகல திறந்த வெளி சிறைக் கைதிகள் வளாகத்தில், இன்று சிறைக் கைதிகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தலைமையில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள 32 சிறைச்சாலையில் உள்ள கைதிகளும் சாரணர் ஜம்போரியில் கலந்து கொண்டனர்.

இன்றிலிருந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ள இச்சாரணர் ஜம்போரியில் தலைமைத்துவம், முதலுதவி, திறமைகளை வெளிக்கொணர்தல் மற்றும் ஆற்றல்கள் தொடர்பான செயற்பாடுகள் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கண்டி மாவட்டத்திற்கு பொறுப்பான சாரணர் தலைவரும், பேராதனை பல்கலைக்கழக பேராசியருமான சாந்த கொட்டேகொட, சிறைச்சாலைகள் ஆணையாளர் உப்புல்தெனிய, சிறைச்சாலை அதிகாரிகள், சாரணர்கள், ஆணையாளர்கள் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.

Latest Offers