அம்பாறையில் காணாமல் போன ஊடகவியலாளர்! பயணப் பொதி மீட்பு

Report Print Steephen Steephen in சமூகம்

அம்பாறை - பொத்துவில் பிரதேசத்தில் தனியார் ஊடகம் ஒன்றில் கடமையாற்றி வந்த ஊடகவியலாளர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொத்துவில் - மதுச்சேனை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஏ.எல்.ஷியான் என்ற ஊடகவியலாளரே நேற்று காலை காணாமல் போயுள்ளார்.

குறித்த நபரின் பயணப் பொதி பொத்துவில் விகாரைக்கு அருகில் உள்ள கடற்கரையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில், ஊடகவியலாளரை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கடற்படை முகாமுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸாரும் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

வீட்டில் ஏற்பட்ட தகராறின் பின்னரே ஊடகவியலாளர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers