கொழும்பில் நபரின் கொடூரச் செயல்! அதிகாலையில் பலர் பலி!! பலர் ஆபத்தான நிலையில்

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

கல்கிஸ்ஸ நீதிமன்றத்திற்கும் இரத்மலானை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் அருகில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று காலை வேளையில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த 8 பேர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்று, மற்றுமொரு மோட்டார் வாகனம், மோட்டார் சைக்கிள் இரண்டின் மீதும் மோதியுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனரும் மற்றொரு நபரும் உயிரிழந்துள்ளனர். மோட்டார் வாகன சாரதி குடிபோதையில் இருந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, கல்கிஸ்ஸ நீதிமன்றத்திற்கு அருகில் குறித்த சாரதி மேலும் இரண்டு நபர்கள் மீது மோதியுள்ளார். அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபத்தின் பின்னர் குறித்த சாரதி குறித்த மோட்டார் வாகனத்திலேயே தப்பி சென்றுள்ளார். குறித்த சாரிதி ஓட்டிய மோட்டார் வாகனம் இரத்மலானை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்னுமொரு மோட்டார் வாகனத்தின் மீதும் 2 மோட்டார் சைக்கிள் மீதும் மோதியுள்ளார்.

இந்த விபத்தை ஏற்படுத்தி மோட்டார் வாகனத்தின் சாரதியும் படுகாயம் அடைந்த நிலையில், பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Latest Offers