வவுனியா சிறைச்சாலைக்கு மகனை பார்வையிட சென்ற தந்தை திடீர் கைது

Report Print Theesan in சமூகம்

வவுனியா சிறைச்சாலைக்கு மகனை பார்வையிட சென்ற தந்தை ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து மகனுக்கு கொடுக்க முற்பட்ட போது நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

சிறையில் உள்ள மகனை பார்வையிட்டு பொருட்கள் கொடுப்பதற்காக நேற்று மதியம் தந்தை சிறைச்சாலை வளாகத்தினுள் சென்றுள்ளார்.

கொண்டு சென்ற பொருட்களில் சவர்காரத்தினை வெட்டி அதனுள் ஹெரோயின் போதை பொருளை வைத்து மகனுக்கு கொடுக்க முற்பட்ட சமயத்திலே தந்தையை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெளுக்குளம் பகுதியினை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் இருந்து 45 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில், சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Latest Offers