பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் வீட்டில் குண்டு வெடிப்பு

Report Print Steephen Steephen in சமூகம்

அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் திருமணம் செய்துக்கொண்ட அதிகாரிகள் வசித்து வரும் உத்தியோகபூர்வ வீடொன்றில் இன்று அதிகாலை கைக்குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

எஸ். தில்ஹானி என்ற பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் வசித்து வரும் வீட்டில் இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த கைக்குண்டு வெடித்துள்ளது.

பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் வசித்து வரும் வீட்டின் ஜன்னல் வழியாக இந்த கைக்குண்டு வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் வீட்டின் சுவர்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த போது பெண் பொலிஸ் உத்தியோகஸ்தரின் இரண்டரை வயது மகள் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்ததாகவும், சம்பவத்தில் இருவருக்கும் எந்த பாதிப்பு ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக நடந்த முதல் கட்ட விசாரணைகளில் சம்பவத்தில் தனது கணவனுக்கு தொடர்பு இருக்கலாம் என பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

பெண்ணின் கணவன் இராணுவத்தில் கடமையாற்றி வருகிறார். கணவன் மற்றும் மனைவி இடையிலான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

சம்பவம் தொடர்பான பொலிஸ் உத்தியோகஸ்தரின் கணவனை கைதுசெய்ய உள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers