பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு புதிய பொறுப்பதிகாரி

Report Print Steephen Steephen in சமூகம்

கடந்த காலத்தில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய பயங்கரவாத விசாரணைப் பிரிவின் புதிய பணிப்பாளராக, யாழ்ப்பாண பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ட்பளியூ.எஸ்.ஈ. ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜயசுந்தர, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பதவிக்கு மேலதிகமாக அமைச்சரவை இணைப்பு பிரிவின் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தை அடுத்து வெற்றிடம் ஏற்பட்ட யாழ்ப்பாண பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பதவிக்கு யு.பீ.ஏ.டி.கே.பீ. கருணாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கருணாரத்ன தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவனத்தின் பிரதான நிர்வாக அதிகாரியாகவும் கடமையாற்றி வருகிறார்.