தொழிலாளர்களின் உரிமையை வலியுறுத்தி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

Report Print Suman Suman in சமூகம்

கிளிநாச்சி மாவட்ட வர்த்தக தொழில் பொது தொழிலாளர் சங்கத்தினரால், தொழில் புரியும் இடங்களில் ஆண் மற்றும் பெண் பணியாளர்களின் உரிமையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது.

மனித உரிமை தினத்தை முன்னிட்டு இன்று காலை கிளிநொச்சி, டிப்போ சந்திக்கு அருகில் போராட்டம் இடம்பெற்றுள்ளது.

தொழில் புரியும் இடங்களில் ஊழியர்கள் மீதான வன்முறையை நிறுத்து எனும் தொணிப்பொருளில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் உரிமைகள், பெண்கள் மீதான வன்முறை, வேலை நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துதல் உள்ளிட்ட விடயங்கள் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.