ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் மூவரை காணவில்லை!

Report Print Navoj in சமூகம்

வாழைச்சேனையில் இருந்து மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் மூவர் உட்பட படகினை காணவில்லை என வாழைச்சேனை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை ஹைறாத் துறையில் இருந்து கடந்த 30ம் திகதி (வெள்ளிக்கிழமை) பயணத்தை மேற்கொண்ட மீனவர்கள் மூவரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீன் பிடிப்பதற்காக ஹைறாத் துறையில் இருந்து கடந்த 30ம் திகதி (வெள்ளிக்கிழமை) இயந்திரப் படகில் மூன்று பேரும் சென்றுள்ளனர்.

மீன் பிடித்துக் கொண்டிருந்த சமயம் 6ம் திகதி (வியாழக்கிழமை) படகு பழுதடைந்துள்ளதுள்ளதாக படகு உரிமையாளரான வாழைச்சேனையைச் சேர்ந்த உசனார் காமிது லெப்பை என்பவருக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தினர்.

அதன்பின்னர் இவர்களை காப்பாற்றும் முகமாக வாழைச்சேனை மீன்பிடி துறைமுக அலுவலகத்திற்கும், கடற்படை பிரிவினருக்கும், வாழைச்சேனை பொலிஸிலும் முறைப்பாடு செய்ததாக படகு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் தொலைபேசி ஊடாக தொடர்புகளை மேற்கொண்டிருந்த சமயம் இறுதியாக 7ம் திகதி வெள்ளிக்கிழமை பேசியதாகவும், பின்னர் தொடர்பு கிடைக்கவில்லை என படகு உரிமையாளர் தெரிவித்தார்.

எனவே காணாமல் போன மூவரை தேடும் வகையில் கல்முனை, சம்மாந்துறை உட்பட பல இடங்களிலும் தேடுகள் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், இதுவரைக்கும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என படகு உரிமையாளர் மேலும் தெரிவித்தார்.

Latest Offers