பாதையை கடந்த தாய்க்கும், மகளுக்கும் நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

Report Print Manju in சமூகம்

பொலிஸாரின் உத்தரவை மீறி பாதசாரி கடவை இல்லாத இடத்தில் பாதையைக் கடந்து சென்ற தாயையும், மகளையும் பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரத்தில் குறித்த தாயும், மகளும் இந்த குற்றத்தை புரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சாவகச்சேரி நீதிமன்றம் தாய் மற்றும் மகள் ஆகிய இருவருக்கும் தலா 1000 ரூபாய் விகிதம் 2,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை செல்லும் மகளின் அவசரத் தேவை காரணமாக அந்த இடத்திலிருந்து பாதை மாறியதாக அவர்களுக்கு மன்னிப்பு வழங்குமாறு சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

எனினும் நீதிமன்றம் அவர்களை மன்னிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers