நாம் பட்ட துன்பங்கள் எமது சந்ததியினர் அனுபவிக்க இடமளியோம்! வவுனியாவில் போராட்டம்

Report Print Theesan in சமூகம்

மட்டக்களப்பு - வவுணதீவில் பொலிஸார் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டமையை கண்டித்து வவுனியா பொது மக்களால் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று பிற்பகல் 1.30 மணியளவில் பழைய பேருந்து நிலையத்தில் ஒன்றிணைந்த மக்கள் மட்டக்களப்பு வவுணதீவில் பொலிஸார் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டமையை கண்டித்து போராட்டம் இடம்பெற்றது.

“மீண்டும் வன்முறை வேண்டாம். நாம் ஒற்றுமையுடன் வாழ விரும்புகின்றோம், 30 வருட யுத்த்தின் துயரங்கள் போதும், மீண்டும் ஒரு யுத்தம் எனும் சொல் கூட எமது நாட்டிற்கு வேண்டாம். நாம் பட்ட துயரங்கள் எமது சந்ததியினருக்கு அனுமதிக்க இடமளிக்க மாட்டோம் போன்ற வாசகங்களை எழுதிய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமான போராட்டம் பஜார் வீதி வழியாக இலுப்பையடி சென்று வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் முடிவடைந்துள்ளது.

Latest Offers