கிளிநொச்சியில் வன்முறையற்ற வாழ்வை கொண்டாடுவோம் கண்காட்சி

Report Print Suman Suman in சமூகம்

வன்முறையற்ற வாழ்வை கொண்டாடுவோம் கண்காட்சி கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கண்காட்சி நாளையும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சமூகத்தில் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற பல்வேறு விதமான சமூக வன்முறைகளை வெளிப்படுத்தும் வகையிலும், கலாசாரத்தின் பேரால் பெண்கள் மீது திணிக்கப்படுகின்ற வன்முறைகள் பற்றியும் பல விதமான ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

மேலும் வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள் குழுவினரான கமலா வாசுகி, ப.நிரஞ்சன், மு.தா.பா.ருக்சனா, கோ. மதீஸ்குமார், வெ. ஜதீஸ்குமார், த.வினோஜா, க.துஸா, அ.கீதாநந்தி, தி.திசாந்தினி, பா.மேரிநிருபா, ப. ராஜதிலகன்,சு.நிர்மவாசன் ஆகிய ஓவியர்களின் ஓவியங்களே காட்சிப்படுத்தப்படவுள்ளன.

Latest Offers