தாய் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நாமல் மறுப்பு

Report Print Murali Murali in சமூகம்

தனது தாய் மீது குற்றம் சுமத்தி பெண் ஒருவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுக்கு முற்றாக மறுப்பு வெளியிட்டுள்ள நாமல் ராஜபக்ச, அந்த செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் கூறியுள்ளார்.

கடந்த ஐந்தாம் திகதி வீடு ஒன்றில் உணவின்றி தவித்த நாய் ஒன்றை பொலிஸாரின் உதவியுடன் காப்பாற்றியதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஷாமினி சேரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும், வீட்டின் உரிமையாளர் சார்பில் முன்வந்த முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ச தலையீட்டினால் நாயை காப்பாற்ற உதவிய பொலிஸார் அன்று மாலையே இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தனது தாய்க்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நாமல் ராஜபக்ச மறுத்துள்ளார். தனது தாய் குறித்து அவதூறுகள் பரப்பப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், தனது தாய் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இலையென நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Latest Offers