இன ஐக்கியத்தை வலியுறுத்தி அங்கவீனமுற்ற இராணுவ வீரரின் சக்கர நாற்காலி பயணம்

Report Print Theesan in சமூகம்

நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் இரு கால்கள் , வலது கை , இரு விரல்களையும் இழந்த முன்னாள் இராணுவ வீரரொருவர் நாட்டின் இன ஐக்கியத்தினை வலியுறுத்தி தேவேந்திர முனையிலிருந்து கடந்த 03ம் திகதி ஆரம்பமான சக்கரநாற்காலி பயணமானது இன்று மாலை 3.30மணியளவில் வவுனியா நகரை வந்தடைந்தது.

தெய்வேந்திர முனையிலிருந்து கடந்த 03ம் திகதி ஆரம்பமாகிய சக்கர நாற்காலி பயணமானது சுமார் 580 km தூரம் கடந்து 11ம் திகதி பேதுரு முனையினை சென்றடையவுள்ளது.

வவுனியாவினை வந்தடைந்த இப் பயணத்தினை தாண்டிக்குளம் பகுதியில் வவுனியா பிரதேச செயலக ஊழியர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் , அரசியல்வாதிகள் , பொதுமக்கள் என பலரும் இணைந்து வரவேற்றனர்.

Latest Offers