கொக்குதொடுவாய் மத்தியில் அபாயகரமான வெடிகுண்டு மீட்பு

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மத்தியில் அபாயாகரமான வெடிபொருள் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.

கனரக வாகனத்தை தகர்த்தழிக்கும் வெடிகுண்டு ஒன்று தனியர் காணி ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிரடிப்படையினரால் இன்று மீட்க்கப்பட்டுள்ளது.

குறித்த காணி உரிமையாளர் பழமரக்கன்று ஒன்றை நடுவதற்காக வீட்டின் பின்புறப்பக்கம் குழிதொண்டியுள்ளார்.

இதன்போது மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் வெடிகுண்டு ஒன்று இருந்ததை கண்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து கொக்குத்தொடுவாய் கிரமசேவையாளர் ஊடாக பொலிஸாருக்கு காணி உரிமையாளர் தகவல் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் இன்று நண்பகல் குறித்த பகுதிக்கு பொலிஸாருடன் சென்ற அதிரடிப்படையினர் அபாயகரமான வெடிகுண்டை மீட்டுள்ளனர்.

1984 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் கொக்குத்தொடுவாய் பிரதேசம் கொண்டுவரப்பட்டபோது அந்தப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்..

27வருடங்களின் பின்னர் மீண்டும் தமது சொந்த ஊரில் (2011 ஆம் ஆண்டு )பொதுமக்கள் மீள்குடியேறியபோது பதுகாப்பான பிரதேசம் என இந்தப்பகுதி அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் 15 கிலோ எடை கொண்ட வெடிபொருள் ஒன்று இன்று மீட்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers