இரண்டு வயது மகளை கொடூரமாக தாக்கிய தாய்

Report Print Manju in சமூகம்

நாரம்மல - அலுத்வேவ பிரதேசத்தில் இரண்டு வயதும் 10 மாதங்களுமான தனது மகளை கொடூரமாகத் தாக்கிய தாயொருவரை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வீட்டு முற்றத்தில் நடப்பட்டிருந்த பூக்கன்றை உடைத்தெறிந்ததாக கூறி 26 வயதான குறித்த தாய் நேற்று தனது மகளைத் தாக்கியுள்ளார்.

பக்கத்து வீட்டுக்காரர் தனது கைத்தொலைபேசியில் சம்பவத்தை பதிவு செய்த பிறகு, பொலிஸ் அவசர பிரிவுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் பொலிஸார் குறித்த பெண்ணைக் கைது செய்து நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக குலியாபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Latest Offers