காட்டு யானைகளை கண்டுபிடிக்க நவீன தொழில்நுட்பம்

Report Print Manju in சமூகம்

புத்தளம் கல்லடி மற்றும் கல்வேவ காட்டுப் பிரதேசங்களில் யானைகள் உள்ள இடங்களை அடையாளம் காணும் திட்டமொன்றை வனஜீவராசிகள் திணைக்களம் ஆரம்பித்து வைத்துள்ளது.

ட்ரோன் கமெராக்களை பயன்படுத்தி காட்டு யானைகள் இருக்கும் இடங்களை அடையாளம் காணவும் அவ்வாநு அடையாளம் காணப்பட்ட யானைகளை தபோவா சரணாலயத்திற்கு அழைத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பணிப்பாளர் நாயகம் சந்தன சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த செயற்திட்டத்திற்கு விமானப்படையின் ஆதரவும் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரோன் கமெராக்களைப் பயன்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட முதல் திட்டம் இதுவாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Latest Offers