யாழிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தில் கஞ்சா கடத்தல்?

Report Print Theesan in சமூகம்

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தில் கஞ்சா கடத்துவதாக வவுனியா பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் சோதனை மேற்கொண்ட போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற நபரின் பயணப் பையிலிருந்து 1 கிலோ 425கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

வெத்தலகேணி பிரதேசத்தினை சேர்ந்த 45 வயதுடைய விக்னேஸ்வரன் என்பவரே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, விசாரணைகளின் பின்னர் நாளை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் வவுனியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Latest Offers