எங்களையும் மகிழ்வுடன் பணியாற்ற வழிவிடுங்கள்

Report Print Thileepan Thileepan in சமூகம்

எங்களையும் மகிழ்வுடன் பணியாற்ற வழிவிடுங்கள் எனும் தொனிப்பொருளில் பால்நிலை வன்முறைக்கு எதிரான கருத்தமர்வு ஒன்று வவுனியாவில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

யாழ். சமூக செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் பால்நிலை வன்முறைக்கு எதிரான 16 நாள் செயற்பாட்டின் ஒரு அங்கமாக இக் கருத்தமர்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

சமூக மட்டத்திலும், வேலைத் தளங்களிலும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், பால்நிலை வன்முறைகளை தடுக்கும் வழிவகைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

இதன்போது சட்டத்தரணி கம்ஷா மதுராகன் அவர்கள் பால்நிலை வன்முறைக்கு எதிரான நகர்வுகள் குறித்து கருத்துரை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், யாழ். சமூக செயற்பாட்டு மையத்தின் இணைப்பாளர் எஸ்.சுகிர்தராஜ், யு.என்.எச்.சீ.ஆர் நிறுவனத்தின் சிரேஸ்ட நிகழ்ச்சித் திட்ட உதவியாளர் எஸ்.மாதவன், மற்றும் கிராம மட்ட பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மகளிர் பொலிசார், தாதியர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.