புதுக்குடியிருப்பில் காணிப்பிணக்கு காரணமாக உச்சநீதிமன்றை நாடிய பொதுமகன்

Report Print Yathu in சமூகம்

புதுக்குடியிருப்பு பகுதியில், பொலிஸார் மற்றும் காணிப்பிணக்குகள் தொடர்பான திணைக்களங்களின் பக்கச்சார்பான நடவடிக்கை தொடர்பில் உச்சநீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு 7ஆம் வட்டாரப் பகுதியில் ஏற்பட்ட காணிப்பிணக்கு காரணமாக பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் இவ்வாறு கடந்த வியாழக்கிழமை மனுத்தாக்கல் செய்துள்ளார்.

காணிப் பிணக்கு கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் இதுவரை தமக்கு நீதி கிடைக்காத நிலையிலேயே பாதிக்கப்பட்டவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட நபர் தனது உண்மை நிலையினை எடுத்துக்கூறி தனக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று தெரிவித்து யாழ்ப்பாணத்தில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் கடந்த புதன்கிழமை அன்று மனித உரிமை மீறல் தொடர்பில் முறையிட்டுள்ளார்.

எனினும் இது தொடர்பாக இரண்டு தடவைகள் விசாரிக்கப்பட்டும் நீதி கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்டவர் தெரிவிக்கின்றார்.

அதேவேளை இவரின் வழக்கு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆறு தடவைகள் விசாரிக்கப்பட்டும் இணக்கசபைக்கு விடப்பட்டும் தீர்வு கிடைக்கப்பெறவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

Latest Offers