புனரமைக்கப்பட்ட விவசாய குளம் கையளிப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

சிறு குளங்கள் புனரமைப்பு திட்டத்தின் ஊடாக 2 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட கிண்ணியா மஜீத் நகர் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட சுங்கான்குழிக் குளம் நேற்று அப்பகுதி விவசாய சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் இன் வேண்டுகோளுக்கினங்கவே குறித்த சிறு குளங்கள் புனரமைப்பு திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கிண்ணியா நகரசபை உறுப்பினர் ஜே.ரிஸ்வி, பிரதேச சபை உறுப்பினர் தௌபீக், பாயிஸ் பாபு ,விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அப்பகுதி மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Latest Offers

loading...