கொழும்பில் கொடூரமாக செயற்பட்ட நபர்! நேற்று ஏற்பட்ட பதற்றம்

Report Print Jeslin Jeslin in சமூகம்

கல்கிஸ்ஸயில் 4 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த சாரதியை கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றும் போது பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

குறித்த சாரதியினால் கொல்லப்பட்ட நபர்களின் உறவினர்கள் வைத்தியசாலையில் பதற்றம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக வைத்தியசாலை இயக்குனர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரின் கால்களுக்கு பாரிய காயம் ஏற்பட்டிருந்தமையினால் அவர் நேற்று அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை எடுத்து கொண்டுள்ளார்.

எனினும் அவர் அறைக்கு மாற்றப்பட்டதன் பின்னர் கொஹுவல பொலிஸார் பாதுகாப்பு வழங்க முடியாதென அறிவித்ததன் பின்னர் அந்த நோயாளி மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.

எனினும் உயிரிழந்தவரின் உறவினர்கள் அம்பியுலன்ஸ் வண்டி அவசர பிரிவிற்கு நெருங்கவிடாமல் பதற்றம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளனர்.

Latest Offers