வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக சாகும் வரை உண்ணா விரத போராட்டம்

Report Print Suman Suman in சமூகம்

வட மாகாண தொண்டராசிரியர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக சாகும்வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று முற்பகல் முதல் அவர்கள் இந்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வருட ஆரம்பத்தில், வட மாகாண தொண்டராசிரியர்கள் 1044 பேருக்கான நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்று அவர்களில் இரு தொகுதியினராக மார்ச் மாதம் 28 ஆம் திகதி 182 பேருக்கு அலரி மாளிகையில் வைத்தும், ஜூலை மாதம் 22 ஆம் திகதி 457 பேருக்கு யாழ்.இந்துக்கல்லூரியில் வைத்தும் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், நியமனம் வழங்கப்பட்டோரில் 288 தொண்டராசிரியர்களே இவ்வாறு உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...