அரசியல் பழிவாங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்ட கிராம அலுவலர்

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

புன்னாலைக் கட்டுவன் வடக்கு ஜே/208 கிராம சேவகர் அரசியல் பழிவாங்குதலுக்காக திடீரென இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் உடுவில் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புன்னாலைக் கட்டுவன் வடக்கு மீள் குடியேற்ற பிரதேசமாகும். இந்த பிரதேசத்தில் வீட்டுத்திட்டங்கள் உட்பட பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான நிலையில் மக்களுக்கான தேவைகளை அறிந்து மிக நேர்த்தியாக கடமை செய்துகொண்டிருந்த கிராம சேவகரை அரசியல் உள்நோக்கத்துக்காக இடமாற்றம் செய்துள்ளனர்.

எனவே குறுகிய நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இடமாற்றத்தை இரத்துச் செய்து எமக்கு அதே கிராம சேவகரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Latest Offers

loading...