கிழக்கு ஆளுனர் தலைமையில் கிராம சக்தி திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

Report Print Gokulan Gokulan in சமூகம்

கிழக்கு மாகாண கிராம சக்தி வேலைத் திட்டத்தின் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கான மீளாய்வு கூட்டம் இன்று இடம்பெற்றது.

திருகோணணலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுனரின் அலுவலகத்தில் ஆளுனர் ரோஹித போகொல்லாகம தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் கீழ் கிராம சக்தி வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற மாவட்டங்களில் குறித்த வேலைத் திட்டங்கள் தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள், எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டன.

இக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திருகோணமலை,மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் மாவட்ட அரசாங்க அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.