வவுனியா நகரசபை வரவு செலவுத் திட்டத்தை மக்கள் பார்வையிட முடியாத நிலை

Report Print Thileepan Thileepan in சமூகம்

நகர சபையின் பொறுப்பற்ற செயற்பாட்டால் 2019 ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவுத் திட்டத்தை பார்வையிட்டு தமது கருத்துக்களை தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

வவுனியா நகரசபையினால் 2019 ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவுத் திட்டம் கடந்த 5 ஆம் திகதி முதல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

எதிர்வரும் புதன்கிழமையுடன் (12.12) காட்சிப்படுத்தலுக்கானதும், மக்கள் கருத்து அறிவதற்குமான காலக்கெடு முடிவடைகிறது.

இந்நிலையில் இன்றைய தினம் வரவு செலவுத் திட்டத்தின் உத்தேச வரைபை பார்வையிட்டு தமது கருத்துக்களை தெரிவிக்கச் சென்றோர் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.

குறித்த உத்தேச வரவு செலவுத்திட்டத்தை பொதுபார்வைக்காக வைக்காது, உத்தியோகத்தர் ஒருவரிடம் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தும் பொறுப்பில் உள்ள உத்தியோகத்தர் விடுமுறையில் உள்ளார்.

அவருக்கு பதிலாக பதில் கடமையில் இருந்த உத்தியோகத்தரும் வகுப்பு ஒன்றிற்கு சென்று விட்டதால் இன்று பார்வையிட முடியாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வரவு செலவுத் திட்டத்தை பார்வையிட முடியாது பலரும் ஏமாற்றத்துடன் திரும்பியிருந்தனர்.

Latest Offers