கேரளா கஞ்சாவை புதைத்து வைத்துவிட்டு மீண்டும் எடுத்து சென்ற நபருக்கு ஏற்பட்ட நிலை

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அரைக் கிலோ கேரளா கஞ்சாவை புதைத்து வைத்து விட்டு மீண்டும் எடுத்துச் சென்ற நபரை இம்மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமீலா குமாரி ரத்நாயக்க இன்று உத்தரவிட்டார்.

பைசல் நகர், கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் அரை கிலோ கேரளா கஞ்சாவை வீட்டு வளாக காணிக்குள் ஏற்கனவே புதைத்து வைத்து விட்டு அதனை மீண்டும் எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபரைக் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Latest Offers