படையினர் வசமுள்ள மக்கள் காணிகள் விடுவிப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

திருகோணமலை மாவட்டத்தில் இராணுவ வசம் இருந்த பொது மக்களின் காணிகளின் ஒரு பகுதி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவின் ஏற்பாட்டில் திருகோணமலையில் உள்ள ஆளுனர் அலுவலகத்தில் வைத்து இக் காணிகள் கையளிக்கப்பட்டன.

பல வருட காலமாக இராணுவப் படை முகாம்களை அமைத்து சுவீகரித்திருந்தனர். இதனை அடுத்து உரிய பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டன.

2015ஆம் ஆண்டுக்கு பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதுவரையில் சுமார் 70 ஆயிரம் ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தவிர தனியாருக்கு சொந்தமான ஆயிரத்து 500 ஏக்கர் காணி இராணுவத்தினர் வசமுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அவ்வாறு தம்வசம் காணப்படுகின்ற காணிகளையும் உரிமையாளர்களிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் படையினர் வசமுள்ள தனியாருக்கு சொந்தமான காணிகளை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள்,படை அதிகாரிகள் உட்பட பல உயர் அதிகாரிகளும்கலந்து கொண்டார்கள்.

தோப்பூர், கல்லம் பத்து, சித்தாரு, பாட்டாளிபுரம் உள்ளிட்ட படையினர்களின் வசமிருந்த சுமார் 12 ஏக்கர் காணிகளே இவ்வாறு உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டன.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப், கிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜெயசேகர, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார, அரச உயரதிகாரிகள் என பலர் பங்கேற்றார்கள்.

Latest Offers

loading...