வீதி மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் முக்கியமான இடங்களில் வீதி விளக்குகளை பொருத்துகின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து மூன்று இலட்சம் ரூபா செலவில் 55 மின்விளக்குகள் புதுக்காடு, மாயவனூர், வட்டக்கச்சி ஆனைவிழுந்தான் ஆகிய இடங்களில் பொருத்தப்படவுள்ளன.

இதேவேளை கரைச்சிப்பிரதேச சபையினால் தெரிவு செய்யப்பட்ட பத்து வட்டாரங்களுக்கு 150 மின்விளக்குகள் பொருத்தப்படவுள்ளன.

கிளிநொச்சி நகரம் பாரதிபுரம் திருவையாறு உதயநகர், கனகாம்பிகைக்குளம், தர்மபுரம், கல்மடுநகர், கண்டவளை, அக்கராயன், கோணாவில் ஆகிய இடங்களில் இந்த மின் விளக்குகள் பொருத்தப்படவுள்ளன.

Latest Offers