நாயாற்று மீனவர்களின் ஆபத்தான முடிவு!

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்களின் கடற்தொழில் பாதிப்படைந்துள்ளது.

குறிப்பாக நாயாற்று பகுதி மீனவர்கள் இரண்டு மாதங்களாக கடற்தொழிலுக்கு செல்லவில்லை என தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அந்தப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள அந்தப்பகுதி மீனவர்கள் தற்பொழுது கடற்போராட்டத்துடன் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

நாயாற்று பெருங்கடற்பகுதி கடற்கரையில் இருந்து 10 மீற்றர் தூரத்தில் சுமார் 20 அடி ஆழமாக அதிகரிக்கின்றது. இதன்படி 100 மீற்றர் தூரத்திற்கு 200 அடி கடல் ஆழம் கொண்ட கடற்பகுதி இது என குறிப்பிடப்படுகின்றது.

மிக ஆழமான இந்த கடற்பகுதி தற்பொழுது சீரற்ற நிலையில் காணப்பட்டாலும் தமது வறுமையை போக்க ஆபத்தான இந்த கடற்தொழிலை மேற்கொள்ள வேண்யுள்ளது என மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Latest Offers