புனரமைப்பு செய்யப்படும் வீதிகளை நேரில் சென்று பார்வையிட்டார் சிறீதரன்

Report Print Arivakam in சமூகம்

புன்னைநீராவி பிரமந்தனாறு பகுதிகளில் புனரமைப்பு செய்யப்படும் வீதிகளை நேரில் சென்று பார்வையிட்டு நடைபெறும் வேலைகளின் முன்னேற்றம் மற்றும் இடர்பாடுகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீரதரனின் ஆராய்ந்துள்ளார்.

நீண்ட காலமாக கருத்தில் எடுக்கப்படாமல் இருந்த தங்கள் பிரதேசத்தின் வீதிகள் அபிவிருத்தி புனரமைப்பு செய்யப்படுவது மகிழ்வைத்தருவதாக அந்த பகுதி பொது மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

புன்னைநீராவி பகுதியில் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் மூலமாக புனரமைப்பு செய்யப்பட உள்ள வீதியின் ஆரம்ப பணிகளையும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆரம்பித்து வைத்துள்ளார்.

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் அந்தப்பிரதேசங்களின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பிதேச மக்களும் கலந்து கொண்டனர்.

Latest Offers