வடக்கில் மட்டும் ஏன் இந்த நடைமுறை? சிக்கல் ஏற்படுமென எச்சரிக்கை

Report Print Theesan in சமூகம்

வட மாகாண அரச கால்நடை வைத்தியர்கள் சங்கத்தின் பொதுக்கூட்டம் நேற்று யாழ்ப்பாணம், நல்லூர் Euroville மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது வட மாகாண அரச கால்நடை வைத்திய அலுவலகங்களில் காணப்படும் ஆளணி மற்றும் பௌதீக வள பற்றாக்குறைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

வடக்கில் உள்ள அரச கால்நடை வைத்திய அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வரவை உறுதிப்படுத்தும் கைவிரல் அடையாள இயந்திரப் பயன்பாடு கால்நடை உற்பத்தி சுகாதார சேவைக்கு பொருத்தமற்றது என சுட்டிக்காட்டிய சங்கத்தினர், இந்த இயந்திரத்தினை கால்நடை வைத்தியர்கள் பாவிக்க முடியாத நிலை உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் இந்த கைவிரல் அடையாள இயந்திரப் பயன்பாடு காரணமாக எதிர்காலத்தில் கால்நடைகளுக்கான மருத்துவ சேவை வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதனைவிட கைவிரல் அடையாள இயந்திரம் மற்றைய மாகாணங்களில் உள்ள கால்நடை வைத்திய அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தப்படாத போதிலும் வட மாகாணத்தில் மட்டும் நடைமுறைப்படுத்தப்படுவது ஏன் என்றும் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.