வாழைச்சேனை, பேத்தாழை பொது நூலகத்தின் ஏழாவது வருட நிறைவு

Report Print Navoj in சமூகம்

வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பேத்தாழை பொது நூலகத்தின் ஏழாவது வருட நிறைவும், பரிசளிப்பு விழாவும் இடம்பெற்றுள்ளன.

குறித்த விழா பேத்தாழை நூலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

நூலகப் பொறுப்பாளர் தாரணி தங்கத்துரை தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஸோபா ஜெயரஞ்சித் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது வாழைச்சேனை, பேத்தாழை பொது நூலகத்தின் நூலக கொடியும், நூலக கீதமும் கலந்து கொண்ட அதிதிகளால் வெளியீட்டு வைக்கப்பட்டதுடன், நூலகத்தின் ஏழாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அதிதிகளால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது.

அத்தோடு தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு வாழைச்சேனை பிரதேச எல்லைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட கலை மற்றும் இலக்கியம் சார்பான போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதில் மட்டக்களப்பு பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஸ், கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் பத்மலோஜினி லிங்கேஸ்லரன் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை அதிதிகள் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், நூலக கீதத்தினை இயற்றிய கலைஞர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

பேத்தாழை பொது நூலகம் தேசிய ரீதியில் மூன்று விருதுகளைப் பெற்று விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.