சமாதானத்தினை மையப்படுத்தியே பல்சமய குழுக்கள் ஆரம்பிக்கப்படுகின்றன

Report Print Navoj in சமூகம்

சமாதானத்தினை மையப்படுத்தியதாக பிரதேசங்கள் தோறும் பல்சமயக் குழுக்களை ஆரம்பித்து வருவதாக அருட்தந்தை ஞா.அலக்ஸ் ரொபட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு - வாழைச்சேனை, பல்சமய கட்டிடத்தில் நேற்று மாலை பல்சமயக் குழு அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வானது அருட்தந்தை தலைமையில் இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இலங்கையிலே சமயங்களிடையே சகவாழ்வினை ஏற்படுத்தும் முகமாகவும் மக்களிடையே ஏற்படும் பிரச்சினைகளை ஆராய்ந்து அவர்களிடையே எந்த முரண்பாடுகளும் இடம்பெறாது தொடர்ந்தும் மக்கள் சமாதானத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும் என்ற நோக்கத்திற்காக இக் குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, இக் குழு சமாதனத்திற்காக செயற்படவும் சமாதானம் நிலை பெறவும் வாழ்த்துவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதேசத்தின் பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதப் பெரியார்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது, நிர்வாகத் தெரிவு இடம்பெற்றதுடன் தலைவராக அ.வசந்தகுமார், செயலாளராக ஏ.எல்.மீராசாகிபு, பொருளாளராக ஜி.ஜோய்பிரகாஸ், உப தலைவர்களாக யூ.எல்.அகமட், எஸ்.ஜெயசேகர், உப செயலாளர்களாக ஏ.அன்ரனிதாஸ் மற்றும் உறுப்பினர்களாக ஏ.ஜெயஜீவன், எஸ்.றினோசா, க.நடேசன், ஏ.எஸ்.எம்.சதிக், ஏ.அவுஸ்ட்கோன், ஜே.எவ்.காமிலா, வி.அனு, காமிலா. வி. அனுஜா, க.ஜெகதீஸ்வரன், எ.அமிர்தலிங்கம், க.ருத்திரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.