திருகோணமலை சிறைச்சாலையில் சுற்று மதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையில் கைதிகளின் பாதுகாப்பிற்காக சுற்று மதில் அமைக்கப்படவுள்ள நிலையில் இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு திருகோணமலை சிறைச்சாலையின் அத்தியட்சகர் ரஜீவ சிறிமால் சில்வாவின் பணிப்பின் பேரில் பிரதான ஜெயிலர் கே.ஏ.எச்.அபேரத்தினவின் தலைமையில் இன்று உத்தியோகபூர்வமாக நடைபெற்றுள்ளது.

சிறைச்சாலையின் 50 வருடங்கள் பழமையான சுற்று மதில் வெடிப்புற்று, உடைந்த நிலையில் காணப்பட்டதால் புதிய சுற்றி மதில் அமைக்கப்படவுள்ளது.

இதில் சிறைச்சாலையின் ஜெயிலர் தர உத்தியோகத்தர்கள், புனர்வாழ்வு அதிகாரிகள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers